தேன் சொட்ட பேசி... தெருவில் நிறுத்திய பிரபல நிறுவனத்தின் ஊழியர்கள் - அதிர்ந்து நிற்கும் ஊர் மக்கள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அதிக வட்டி தருவதாக கூறி நகைகளை வாங்கி மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊத்துமலையில் இயங்கி வரும் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த இளவரசன் , வர்ஷா, இம்மானுவேல் ஆகியோர் நகைகளை அடமானம் வைத்தால்
அதிக வட்டி தருவதாக கூறி நூதன மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. நகைகளுக்கு
அடமான ரசீது மட்டும் கொடுத்த அவர்கள்
6 மாதம் வரை 5 முதல் 10 ஆயிரம் ரூபாய்
வரை மாதந்தோறும் வட்டி தந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நகைகளை திருப்பி கேட்டவர்களுக்கு அடமான தொகையை கட்டுமாறு கூறியதால் அதிர்ச்சி அடைந்தவர்கள் நிதி நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story