நெல்லை அருகே பேரதிர்ச்சி.. காவல்துறை நண்பனை காட்டுக்குள் வைத்து கதையை முடித்த நண்பர்கள்..

x

ரெயில் நிலையத்தில் தன்னை வரவேற்க நண்பர்கள் நின்றிருப்பதைப் பார்த்த இளைஞர் சந்தோஷத்தில் அவர்களைக் கட்டி அனைத்து இருக்கிறார்....ஆனால்...அது தான்..

கடைசி சந்திப்பு என்று நினைத்து பார்த்திருக்க வாய்ப்பில்லை..

காற்றாலை நிறைந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்... மறைத்து கொண்டு வரப்பட்ட அரிவாளுக்கு இறையாக்கப்பட்டு இருக்கிறார்...

சம்பவ இடத்தில் தாய் தந்தை மனைவி குழந்தைகள் அழும் குரல் காற்றைக் கிழிக்க....காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர்.

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டியைச் சேர்ந்த இளைஞர் பெரியதுரை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்

ஷார்ட் ஹேண்ட் ரைட்டராக கடந்த மூன்றாண்டாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

வேலை கிடைத்த சந்தோஷத்தில் அடுத்து சில தினங்களில் திருமணம்.... குழந்தை.... என வாழ்க்கை நன்றாகவே சென்றிருக்கிறது பெரியதுரைக்கு ....

இதனிடையே அதே ஊரைச் சேர்ந்த அல்லிதுரை மற்றும் அருண் என இருவரரும்... ஒரே பெண்ணைப் போட்டிப் போட்டு

காதலித்ததால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில்......இறுதியில் அந்த பெண்ணை அல்லிதுரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தான் அல்லிதுரை மனைவியுடன் பெரியதுரை அடிக்கடி பேசி வந்தது, அல்லிதுரைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மனைவியை அல்லிதுரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தான் ...ஆசையைக் காட்டி.. ஊருக்கு வரவழைக்கப்பட்ட பெரியதுரை காட்டுப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு... அரிவாளுக்கு இறையாக்கப்பட்டு இருக்கிறார்.

கொலை சம்பந்தமாக அல்லிதுரை அவரது மனைவி ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அல்லிதுரை மனைவியிடம் தகாத உறவில் பெரியதுரை இருந்து வந்ததனால், இந்த கொலை கழ்த்தப்பட்டிருக்கலாமா எனவும் அதே சமயத்தில் ...எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அல்லிதுரை மற்றும் அருண் சேர்ந்து பெரியதுரை கொலை செய்திருக்கலாமா என்கின்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்