பள்ளி செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவர் தற்கொலை... தென்காசியில் அதிர்ச்சி

x
  • பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் 9 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்..
  • 14 வயதான இவர், மாறாந்தை அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
  • இந்நிலையில், பள்ளி விடுமுறையை முன்னிட்டு தன் தந்தையுடன் பந்தல் அமைக்கும் வேலைக்கு கண்ணன் சென்றதாக கூறப்படுகிறது.
  • தொடர்ந்து, வாத நோயால் பாதிக்கப்பட்டு கண்ணனின் தந்தை வீட்டிலே முடங்கிய நிலையில், அவரை கவனித்து வந்த கண்ணன்,
  • கூடவே தந்தையின் தொழிலுக்கும் சென்று வந்திருக்கிறார். இந்நிலையில், பள்ளிக்கு செல்ல மறுத்த மகனை கண்டு வருத்தமடைந்த தந்தை,
  • அவரை பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த கண்ணன்,
  • தந்தை திட்டிய ஆத்திரத்தில் விஷமறிந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
  • இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்