ரேஷன் கடை கட்டும் பணியை தொடங்க கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ரேஷன் கடை கட்டட பணியை தொடங்கக் கோரி, கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திப்பணம்பட்டி ஊராட்சி சென்னல்தாபுதுக்குளத்தில் கட்டப்பட்டு வந்த கட்டட பணியை, தனிநகர் தொடர்ந்த வழக்கு காரணமாக நிறுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக கட்டடம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து சென்ற போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story