மே.தொ. மலையில் கேப் விடாமல் அடித்து நொறுக்கும் மழை.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

x

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கடையம் ராமநதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள ராமநதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை அணையின் நீர்மட்டம் 77.5 அடியாக இருந்த நிலையில், தற்போது 82 அடியை எட்டியது.

இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய 100 கன அடி நீரும், உபரி நீராக முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், பாப்பான்குளம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கரையோர மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்