சிறுவன் உயிரை பறித்த குற்றாலம்... உடனே எடுக்கப்பட்ட அதிரடி முடிவு
தென்காசி மாவட்டத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. நேற்று திடீர் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றாலம் செண்பகாதேவி அருவியில் மழைக்காலங்களில் வெள்ளத்தின் அளவை கண்டறிய கருவிகள் பொருத்த, சென்னை வானிலை ஆய்வு மையத்துடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பழைய குற்றாலம் அருவி மற்றும் அந்தப் பகுதிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டி, பொதுப்பணித் துறையினருக்கு குற்றாலம் வனச்சரகம் சார்பில் அறிவிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story