"இடுகாட்டில்... கோயிலா?" பரபரக்கும் தூத்துக்குடி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரகாஷ என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், திருசெந்தூர், சுப்ரமணியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயா வைகுண்ட சுவாமி கோவிலின் விரிவாக்கத்திற்காக, அறநிலைய துறை அதிகாரிகள், கோயில் அருகே உள்ள இடுகாட்டை இடித்து அப்புறப்படுத்த முயற்சி செய்வதாக தெரிவித்தார். இடுகாட்டை இடிக்க தடை விதிப்பதோடு, மாற்று இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். சுடுகாட்டிற்கான மாற்று இடம் வழங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்