பள்ளிக்கல்வித்துறை விடுத்த எச்சரிக்கை | Teachers | department of Education

x

ஆசிரியர்களை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், பணப்பலன் குறித்து ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் குறித்த நடவடிக்கையை சரியாக செய்யாவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை விதிமுறைகள் படி காலதாமதமின்றி அலுவலக தலைவரான தலைமை ஆசிரியருக்கு கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அமைச்சு பணிகளுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதாக முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கடிதம் அனுப்பிய நிலையில், பள்ளிகல்வித்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்