இறக்கும் முன் அரசு பள்ளி ஆசிரியரின் நடுங்கவைக்கும் வாக்குமூல வீடியோ.. தலைசுற்றி கிடக்கும் போலீஸ்
சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பாலாஜி நகரில் வசித்து வந்த அரசு பள்ளி ஆசிரியர் தம்பதி லிங்கம்-பழனியம்மாள், அவர்களின் மகன், மகள், பேத்தி 3 மாத குழந்தை ஆகியோர் கடந்த 23-ம் தேதி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தியதில், ஆசிரியர் லிங்கம் தனது குடும்பத்தினரின் மருத்துவ செலவுக்காகவும், மகளின் திருமண செலவுக்காகவும் பலரிடம் இருந்து லட்சக் கணக்கில் கடன் வாங்கியிருந்தது தெரியவந்தது. கடன் கொடுத்தவர்களில் சிலர், கந்து வட்டி வசூலித்ததுடன் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் கடந்த பிப்ரவரி மாதம் ஒருமுறை லிங்கம் தற்கொலைக்கு முயன்றார். பின்னர், மருத்துவ சிகிச்சை பெற்றபோது, தனக்கு கடன் கொடுத்தவர்கள் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார்.
Next Story