மாணவியிடம் உணவு குறித்து கேட்டு காலணியை துடைக்க வைத்த ஆசிரியர் - கோவையில் அரங்கேறிய அதிர்ச்சி
கோவை துடியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், அபிநயா என்ற ஆசிரியை கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியிடம் முறையிட்டதால் ஆத்திரமடைந்த ஆசிரியை அபிநயா, சக மாணவர்கள் முன்னிலையில் பெற்றோரின் தொழிலை கேட்டு, உணவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து தலைமை ஆசிரியையிடம் மீண்டும் முறையிட்டபோது, அவரும் மிரட்டல் விடுத்ததாகவும், மாணவி அணிந்திருந்த உடையை கொண்டு அனைவரது காலணிகளையும் துடைக்க வைத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த மாணவி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற்றோருடன் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story