இந்த ஒரு தகுதி இருந்தால் போதும் இந்தியாவும் வளர்ச்சியடைந்த நாடு-அமெரிக்கா Vs இந்தியா..எங்கே குறை?
நேரடி வரிகள் ஏழைகள் மீது மிக மிக குறைவாகவும், நடுத்தர
வர்கத்தினரின் மீது சற்று அதிக அளவுக்கும், பணக்காரர்கள்
மீது மிக அதிக அளவுக்கும் விதிக்கப்படுகிறது.
ஆனால் மறைமுக வரிகள், ஏழை, பணக்காரர்கள் பேதமின்றி
அனைத்து பிரிவினரும் சம அளவில் செலுத்த
வேண்டியுள்ளதால், இதன் பங்கு குறைவாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
ஒரு நாட்டில் ஜி.எஸ்.டி வரி, விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளின் மொத்த வசூல் அளவை விட நேரடி வரிகளின் வசூல் அளவு அதிகமாக இருந்தால், அந்நாடு முன்னேறிய நாடாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில், மொத்த வரி வசூலில் வருமான வரி போன்ற
நேரடி வரிகளின் பங்கு 49 சதவீதமாகவும், விற்பனை வரி
போன்ற மறைமுக வரிகளின் பங்கு 17 சதவீதமாகவும், சமூக
பாதுகாப்பு வரிகளின் பங்கு 23 சதவீதமாகவும் உள்ளன.
இந்தியாவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நேரடி வரிகளின் விகிதம் 2023-24ல் 6.6 சதவீதமாக அதிகரிக்க உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நிதின் குப்தா கூறியுள்ளார்.
2020-21ல் இது 4.78 சதவீதமாக இருந்து, 2021-22ல் 5.97
சதவீதமாகவும், 2022-23ல் 6.11 சதவீதமாகவும் இருந்தது.
இந்தியாவில் மறைமுக வரிகள் விகிதம் 2022-23ல் 4.9 சதவீதமாக இருந்து, 2023-24ல் 5 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.