தமிழகத்தில் டாடாவின் அடுத்த பாய்ச்சல்.. 5,000 பேருக்கு கொட்டும் வேலைவாய்ப்பு | TATA | Tamilnadu
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரமாக மாற்றுதல் என்ற இலக்கோடு, கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்திட்டங்களை வெளியிட்டார். அதை செயல்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், பானபாகத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமையவுள்ளது. 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி முதலீட்டில், ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானது. தமிழக அரசின் சார்பில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைய 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் துவங்க உள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம், டாட்டா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.