சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் திறக்கப்பட்டது எப்படி? கலெக்டர் ஆபிஸை முற்றுகையிட்ட பொதுமக்கள்
நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி வட்டாட்சியர் முன்னிலையில், 25 நாட்களுக்கு முன் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன் அறிவிப்பு இன்றி அந்த டாஸ்மாக் கடை, மாவட்ட கலால் துறை அதிகாரிகளால் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டமாக வந்த வெள்ளப்பள்ளம் கிராம மக்கள், அங்குள்ள கலால் துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story