அக்காவை கழுத்தறுத்து கொன்ற சைக்கோ தம்பி... அடைக்கலம் கொடுத்த பாவத்திற்கு கிடைத்த பரிசு...

x

ஓட்டு வீட்டுக்குள் நடந்த ஒரு கொடூர கொலையை தான் இந்த நபர் நேரில் பார்த்ததை போல் விவரித்திருக்கிறார்.

இதே வீட்டைச்சேர்ந்த பெண், கீழே தள்ளி கழுத்தறுத்து கோரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

சமையலறையில் மஞ்சள் நிற கோணிப்பை இருக்கும் இடம் தான் கொலை நடந்த ஸ்பாட்....

கொல்லப்பட்டவர் உமா. தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டி சரஸ்வதி நகரை சேர்ந்தவர். 54 வயதாகிறது. இவரது கணவர் தியாகராஜன், அதே பகுதியில் டீகடை நடத்தி வந்திருக்கிறார். மனைவி உமா வீடடிலேயே சிறிய ஹோட்டல் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று வீட்டிலிருந்த உமா, இப்படி கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி துடித்துகொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு வந்த தியாகராஜன் மனைவியின் நிலை கண்டு ஆடிப்போயிருக்கிறார்.

உடனே உமாவை அள்ளி எடுத்து ஆம்புலென்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார், பாதி அறுந்த தொண்டையோடு நடந்ததை கணவனிடம் விவரித்தள்ளார் உமா.

நடந்ததை வாக்குமூலமாக கூறிய உமா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பறிதாபமாக இறந்து போயிருக்கிறார்.

இந்த பயங்கரத்திற்கு காரணம் உமாவின் ஆருயிர் தம்பி சிவக்குமார். அக்காவை கொன்று விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி இருக்கிறார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவக்குமாரை பற்றி விசாரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அப்போது தான் சிவக்குமாரின் கிரைம் ஹிஸ்ட்ரி போலீசாரை திக்குமுக்காட வைத்திருக்கிறது...

ஆம்...சிவக்குமார் ஒரு கொலைக்குற்றவாளி... கடந்த 2003 ஆம் ஆண்டு சிவக்குமார் தனது 4 வயது மகளை ஈவு இரக்கமின்றி கிணற்றில் வீசி கொலை செய்ததோடு, கட்டிய மனைவியையும் கடப்பாறையில் குத்தி இருக்கிறார். அந்த சம்பவத்தில் போலீசார் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். சரியாக 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து சமீபத்தில் தான் வெளிவந்திருக்கிறார்.

உறவினர்கள் வீட்டிற்கு சென்று அடைக்கலம் தேடி இருக்கிறார். ஆனால் மகளை கொன்ற கொலைகாரனை யாரும் வீட்டில் சேர்க்க தயாராக இல்லை. இதனால் சிவக்குமாரை விரட்டி அடித்திருக்கிறார்கள். அப்படி பல இடங்கள் சுற்றிய சிவக்குமார் கடைசியாக வந்து சேர்ந்த இடம் தான் தஞ்சாவூர் மனோஜ்பட்டியில் உள்ள உமாவின் வீடு.

அக்காவிடம் அழுது புலம்பி அடைக்கலம் கேட்டதால், பரிதாபப்பட்டு தன்னுடனே தம்பியை தங்க வைத்திருக்கிறார் உமா. கடந்த 10 மாதங்களாக இந்த வீட்டிலேயே தங்கிக்கொண்டு உமாவுடன் ஹோட்டல் வேலைகளுக்கு ஒத்தாசையாக இருந்திருக்கிறார் சிவக்குமார்.

ஆனால் சிவக்குமார் சரிவர வேலை செய்யாமல் அடிக்கடி பஸ் ஏறி எங்காவது சென்று விடுவாராம். இதனால் உமா தம்பியை கண்டித்திருக்கிறார். வேலை செய்ய சொல்லி திட்டி இருக்கிறார். இந்த ஆத்திர வார்த்தைகள் எல்லாம், சிவக்குமாரின் மனதில் கொலைவெறியை தூண்டியதோ என்னவோ, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த கொடூரத்தை செய்ய துணிந்திருக்கிறார்.

சமையலறையில் இருந்த உமாவை, தாக்கி கீழே தள்ளி விட்ட சிவக்குமார், அவர் மீது ஏறி அமர்ந்து கழுத்தை கொடூரமாக துடிதுடிக்க

அறுத்திருக்கிறார். சாகும் வரை திமிராமல் இருக்க இரண்டு கைகளையும் மடக்கி பிடித்து உமா மயங்கிய பின்னர் அங்கிருந்து சாவகாசமாக கிளம்பி பஸ்ஸில் பயணித்ததுள்ளார்.

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் சிவக்குமாரை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது அக்காவை கொன்றதற்கு மாஸ்டர் பட விஜயை போல ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதையை சொல்லி குழப்பி இருக்கிறார்.

இதே போல் தான், 20 ஆண்டுகளுக்கு முன்னர் மகளை கொன்று, மனைவியை கடப்பாரையால் குத்திய வழக்கிலும் போலிசார் எவ்வளவோ விசாரித்து உண்மையை கண்டறிய முடியவில்லையாம். ஒவ்வொரு விசாரணையிலும் ஒவ்வொரு புது கதையோடு வந்து போலீசாரை மிரள வைத்திருக்கிறார் சிவக்குமார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்