செய்ய கூடாததை செய்த பஸ் டிரைவர்.. ஓன்று கூடிய பொதுமக்கள் ..தஞ்சை அருகே உச்ச கட்ட பரபரப்பு
தஞ்சை பண்டாரவாடையில் சீருடை இன்றி குடிபோதையில் இருந்த தனியார் பேருந்து ஓட்டுனரை முற்றுகையிட்ட பொதுமக்கள், காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பண்டாரவாடை செல்ல பேருந்தில் ஏறிய அமானுல்லாவிடம் அங்கு பேருந்து நிற்காது என தனியார் பேருந்து நடத்துனர் கூறியதாக தெரிகிறது. இதை அடுத்து, ஊர் மக்களுக்கு அமானுல்லா தகவல் தெரிவித்ததை அடுத்து, நிற்க மறுத்த பேருந்தை பண்டாரவாடை பொதுமக்கள் சாலையில் வழி மறித்த போது, ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story