கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு குற்ற உணர்ச்சியே இல்லாமல் கேசுவலாக செல்லும் கயவர்கள்
தஞ்சை அருகே, இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், இளைஞர் சாவகாசமாக செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. தஞ்சை பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமைக்குப்பின்னர் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சாவகாசமாக செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story