தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் குவியும் பாலியல் புகார்.. பரபரப்பில் தலைமை செயலகம்

x

தமிழகத்தில், கல்வி நிலையங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.பள்ளி, கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் பெறப்பட்டு வரும் நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், இன்று பிற்பகல் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் காணொலிக் காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்