48,725 பேர் மீது போதைப்பொருள் வழக்கு - தமிழக காவல்துறை கொடுத்த மேலும் ஒரு ஷாக் ரிப்போர்ட்

x

கடந்த 4 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் தொடர்பாக 48,725 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 87 ஆயிரத்து 270 கிலோ கஞ்சா, 22 ஆயிரத்து 817 கிலோ ஹெராயின், 2 லட்சத்து 8 ஆயிரத்து 724 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 835 கிராம் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது போதைப் பொருளுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் பன்மடங்கு அதிகமாகும். மேலும் தீவிர செயல்பாடுடைய வழக்கமான குற்றவாளிகளில் 1908 பேரை காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்