Youtube பார்த்து `தில்லுமுல்லு' செய்த குடும்பம் - விசாரணையில் ஷாக்கிங் தகவல்

x

Youtube பார்த்து `தில்லுமுல்லு' செய்த குடும்பம் - விசாரணையில் ஷாக்கிங் தகவல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே யூடியூப் பார்த்து கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெருந்துறையை அடுத்த திங்களூரில் நடைபெறும் வாரச்சந்தைகளில் கள்ள நோட்டு புழங்குவதாக திங்களூர் காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, போலீசார் கொடுத்த அறிவுறுத்தலின்படி உஷாராக இருந்த வியாபாரி ஒருவர், முதியவர் ஒருவர் கொடுத்த ரூபாய் நோட்டைக் கண்டு சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர், இக்கரைபள்ளியை சேர்ந்த ஜெயபால் என்பதும், இவருடைய மகன் ஜெயராஜ், யூடியூபில் பார்த்து கற்றுக் கொண்டு கள்ள நோட்டு தயாரித்துக் கொடுத்ததும் தெரியவந்தது.

கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் பயிற்சி எடுத்து, 200, 500, 100 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, அவற்றை மக்கள் கூடும் இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

இதையடுத்து, ஜெயராம், தாய் சரசு, தந்தை ஜெயபால் மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா பெண் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் இயந்திரம், 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்