நாளை விநாயகர் சதுர்த்தி... முக்கிய உத்தரவுக்கு தமிழகம் கொடுத்த பதில்

x

விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய சட்ட ரீதியான நடைமுறை தேவைப்படுகிறது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியின்போது, அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, சென்னையை சேர்ந்த அரிஹரன் என்பவர், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

அந்த கூட்டுக் குழு, சிலைகளை கரைக்க அனுமதி கேட்பவர்களிடம் இருந்து, சிலையின் அளவுக்கு ஏற்றபடி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலையை கரைத்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, சிலைகளைக் கரைக்க கட்டணம் நிர்ணயிக்கவும், அபராதம் விதிக்கவும் சட்டரீதியான நடைமுறை தேவைப்படுகிறது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்