பட்டப்பகல் நேரம்..பதுங்கி பதுங்கி ஆயுதங்களோடு குதித்த கயவர்கள்..தனியாக இருக்கும் பெண்கள் டார்கெட்டா?

x

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரேசகர். இவர் தன் மகளுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் வைத்திருந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார். இதில், நிச்சயதார்த்திற்காக குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு சென்றிருந்த நிலையில், நேரம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 9 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதே கொள்ளையர்கள், பக்கத்து தெருவில் வசித்து வரும் பிரகாஷ் என்பவரின் வீட்டிலும் அடுத்தடுத்து 3 சவரன் நகை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் இரு வீட்டிலும் சோதனை நடத்தி வரும் நிலையில், சிசிடிவி ஆதாரத்துடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்