தாம்பரம் -செங்கல்பட்டு.. கிரீன் சிக்னல் கொடுத்த அரசு... தமிழகத்தில் புதிய துவக்கம்

x

ஜி.எஸ்.டி சாலையில், தாம்பரம் சென்னை இடையே, 27

கிலோ மீட்டர் நீளத்திற்கு மிக நீண்ட மேம்பாலம் ஒன்றை 3

ஆயிரத்து 523 கோடி ரூபாய் செலவில் கட்ட தேசிய

நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருந்தது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மகிந்திரா சிட்டி,

பொத்தேரி எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் ஆகிய இடங்களில், இதில் இருந்து இறங்கும் பாதைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டச் செலவு மிக அதிகம் என்பதால், இதற்கு பதிலாக பல்வேறு சிறிய மேம்பாலங்களை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறைமலை நகர், ஃபோர்ட் தொழிற்சாலை, சிங்கபெருமாள் கோயில் மற்றும் மகிந்திரா சிட்டி சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. வண்டலூரில் இருந்து

பொத்தேரி வரை ஏழு கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு நீண்ட

மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்

மூலம் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் காட்டாங்குளத்தூர் சந்திப்புகளை வாகனங்கள் தவிர்க்க முடியும்.


Next Story

மேலும் செய்திகள்