"மாணவர்கள் ஆர்வம்".. தலைமை ஆசிரியர்கள் சொன்ன தகவல்
உயர்கல்வி சேர்க்கையில் பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருவதால், மாணவர்கள் அதிக அளவில், அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வருவதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோன்று ஆறாம் வகுப்பிலும், இதர வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உயர்கல்வியில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, உயர்கல்வியில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதன் காரணமாகவும் , வேறு பல்வேறு திட்டங்கள் காரணமாகவும் , அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்து 600 மாணவர்கள் படித்து வரும் நிலையில், தற்போது அதிக அளவிலான மாணவர்கள் சேருவதற்காக வருவதாக தலைமையாசிரியர் பிரபுதாஸ் தெரிவித்துள்ளார்.