தமிழகத்திற்கு குறி.. ``ஏலியன்கள் தந்த க்ரீன் சிக்னல்...'' உலகிலேயே முதன்முதலாக சேலத்தில்...
உலகத்திலேயே ஏலியனுக்குக் கோயில் தமிழகத்தில் தான் முதன்முதலில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நம்ப முடிகிறதா?...பாதாள அறையில் மிரட்டும் ஏலியன் கோயில்...சிலை வைத்து ஏலியனுக்கு பூஜை...என்னதான் நடக்கிறது?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
சரட்டென்று பறக்கும் தட்டு பறந்து போனது...ஏலியன்கள் டாட்டா காட்டினார்கள்...என்பது போன்ற கட்டுக்கதைகள் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை உலா வந்தன...
அதற்கு பிறகு ஏலியன்கள் மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற புதுப்புரளியைப் பரப்பி விட்டார்கள்...
அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் டாட்டூ என்ற ஏலியனுடன் ஆட்டம் போட்டதை பார்த்து புல்லரித்து போனவர்கள் நாம்..
இதுநாள் வரை இவையெல்லாம் கதைகள் தான் என்று தானே நம்பிக் கொண்டிருந்தோம்...
ஆனால் உண்மையிலேயே ஏலியன்கள் இருக்கிறார்கள் என அடித்துக்கூறி கோயில் கட்டி வழிபாடு நடக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?...
எங்கு தெரியுமா?...படங்களில் காட்டுவது போல் ஏலியன்கள் வந்திறங்கும் அமெரிக்காவில் அல்ல...நம் தமிழ்நாட்டில்...
அதுவும் சேலம் மாநகரில் பாதாள அறையில் சிலை வடிவில் அருள்பாலிக்கிறார் ஏலியன் சாமி...
சேலம்... மல்லமுப்பம்பட்டி...இது தான் சிவ கைலாய ஆலயம்...வேறெங்கும் இல்லாதளவு இங்கு இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைந்துள்ளதாம்...
சக்தி தேவி, பார்வதி தேவி, லிங்க ரூபத்தில் சிவன்... கூடுதலாக பஞ்சமி வராகி அம்மன், நான்குமுக முருகன், ஐந்துமுக காளி, காமதேனு கடவுள் சிலைகளும் உண்டு...
ராமர் போர் முடிந்து ஓய்வு பெற்ற இடமாதலால் ராமகவுண்டனூர் என பெயர் பெற்ற இவ்விடத்தில் ராமர் அம்பு எய்த கோலத்தில் சிலை...
இப்படி நம்மூர் கடவுள்களுக்கு மட்டுமில்லை...வெளிநாடெல்லாம் தாண்டி வெளிகிரக கடவுள் ஏலியனுக்கும் சிலை உண்டு பாதாளத்தில்...
தினந்தோறும் ஏலியன் கடவுளுக்கு நேரம் தவறாமல் பூஜை செய்கிறார் கோயில் பூசாரி சித்தர் பாக்கியா...
ஏலியன்கள் தான் சிவன் படைத்த முதல் பிரபஞ்ச தெய்வமாம்...
உலகில் முதன்முதலில் ஏலியனுக்கு சிலை அமைத்து வழிபடும் இடம் என்ற பெருமையையும் சேலம் சேர்த்துக் கொண்டது...
ஏலியனுக்கு வழிபாடா?...யார் இதற்கெல்லாம் அனுமதி தருவது?....என்ற கேள்வி எழுகிறதா?...அனுமதி தந்ததே ஏலியன்கள் தானாம்...
புலி வருது கதை நிஜமாவதைப் போல ஏலியன்கள் என்ட்ரியே இனிதான் அதிகமாகுமாம்...
ஆத்ம ரூபத்தில் உரையாடல் நடக்குமாம் பூசாரி சித்தர் பாக்யாவுக்கும் ஏலியன்களுக்கும்...நினைக்கையிலே தொண்டைக்குழி அடைக்கிறது...