ஒருவர் பலியான நிலையில் தடையை மீறி நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

x

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் கூகுள் மேப் மூலம் இந்த நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் இளைஞர்கள் இந்த அருவியில் குளிக்கச் சென்ற போது ஒரு இளைஞர் உயிரிழந்தார். தற்போது தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உயிலட்டி நீர் வீழ்சிக்குள் அத்து மீறி நுழைந்து ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்