தமிழகத்தை பரபரப்பாக்கிய நியோமேக்ஸ்.. மேலும் ஒரு முக்கிய புள்ளி கைது
நிதி நிறுவன மோசடி வழக்கில் நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குனர் மகாலிங்கத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது. இந்த புகாரில் நியோமேக்ஸ் நிர்வாக இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன, பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நியோ மேக்ஸ் துணை நிறுவனமான டிரிடஸ் ப்ராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குநரான சிவகங்கையைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story