மொத்த தமிழகத்தையும் கொதிக்க விட்ட ’தமிழ்த்தாய் வாழ்த்து’ பாட்டு..ஆளுநர் நின்ற மேடையில் என்ன நடந்தது?

x

மொத்த தமிழகத்தையும் கொதிக்க விட்ட ’தமிழ்த்தாய் வாழ்த்து’ பாட்டு..ஆளுநர் நின்ற மேடையில் என்ன நடந்தது?


தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்ற விழாவில், "திராவிட" என்ற வார்த்தையை நீக்கி விட்டு தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் விவாதத்துக்கு வழி வகுத்திருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டம் பெரும் சர்ச்சைக்கிடையே நடந்து முடிந்திருக்கிறது..

பொன்விழா கொண்டாட்டத்திற்கான அறிவிப்பு வெளியானபோதே, அதனுடன் சேர்ந்து இந்தி மாத நிறைவு விழாவும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது..

இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகும் எனக்கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி வரும் காலங்களில் இது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்...

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், விழாவின் தொடக்கத்திலே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பது சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது...

"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரி இல்லாமல் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது..

இந்த சர்ச்சைக்கிடையே, விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், தமிழகத்தில் மட்டும் 3 ஆவது மொழியை அனுமதிக்க மறுக்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்...

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டு பாடச் சொல்வாரா எனவும், ஆர்.என்.ரவி ஆளுநரா? அல்ல ஆரியநரா ? எனவும் கேட்டு விமர்சித்திருக்கிறார்..

கூடவே, தமிழ்நாட்டின் உணர்வுகளை ஆளுநர் அவமதித்து வருவதால் அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்திருப்பது பெரும் விவாதத்துக்கு வழி வகுத்திருக்கிறது...

இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட இந்த விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்