ஓங்கி ஒலிக்கும் அபாயமணி... 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... மிரளும் மக்கள்

x

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரியில் நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

vovt

மேட்டூர் அணையில் இருந்து, குடிநீருக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, ஆகிய மாவட்டங்கள் வழியே வரும்போது, கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எடுக்கப்படுவதாலும், அதிக வெப்பத்தால் தண்ணீர் ஆவியாவதாலும், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 288 கன அடி வீதம் மட்டுமே வருகிறது. கரூர் மாவட்டத்தில் 63 இடங்களில் குடிநீர் திட்ட பணிகளுக்காக ராட்சத குழாய்கள் மூலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கபடுவதால், 35 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்