உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்.. 4 மாவட்டத்தில் பரபரப்பு

x

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றத்திற்கு எதிரே உண்ணாவிரத போராட்டம் நடந்து வருவதால் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் கருப்புச்சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற வளாக முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கலில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதோடு, புதிய சட்ட திருத்தத்தை வாபஸ் வாங்கும் வரை தங்கள் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்