காவி நிறத்தில் மாறிய DD நியூஸ் - புது விளக்கம் கொடுத்த தமிழிசை

x

காவி நிறத்தில் மாறிய DD நியூஸ் - புது விளக்கம் கொடுத்த தமிழிசை

சமீபத்தில் DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக முன்னாள் ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது என்றும், DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்தது தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காவி என்பது தியாகத்தின் வண்ணம் அது நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்ததாக உள்ளதால் அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்