தமிழிசை சௌந்தரராஜன் திடீர் அறிக்கை

x

#tamilisaisoundararajan #bjp

பிரதமர் மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்கவும், தேர்தல் களத்தில் பணியாற்றவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Vovt

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து, தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாஜகவில் இணைந்து 25 வருடங்களான நிலையில், தனக்கு 2 மாநிலங்களுக்கு ஆளுநர் என்ற மிகப்பெரிய பொறுப்பை மத்திய அரசு வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக அரியணையில் அமர வைக்கவும், தேர்தல் களத்தில் களமிறங்கி பணியாற்றவும், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் பாஜகவில் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆளுநராக இருந்து தற்போது அக்காவாக திரும்பி வந்திருப்பதாகவும், வெற்றியை தந்தால் மக்களுக்காக பணியாற்ற காத்திருப்பதாகவும் தமிழிசை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்