தமிழர்களின் கூலி வேலைக்கும் வேட்டு..பாதிக்கு பாதி..நேரடியாக விழும் அடி..அடி மடியில் கைவைத்த..

x
  • தமிழக மக்களின் அமைப்பு சாரா தொழிலாளர் பணிகளை வடமாநிலத்தவர் கைப்பற்றுவது அதிகறித்துவிட்ட நிலையில், தற்போது விவசாய பணிகளிலும், அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
  • தமிழகத்தின் தலைநகர் தொடங்கி, குக்கிராமங்கள் வரை வடமாநிலத்தவர் எண்ணிக்கை பெருகிவிட்டது. நாளுக்கு நாள் தென் மாநிலங்களுக்கு ரயிலேறி வரும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை
  • துவக்கத்தில் கட்டிட தொழிலுக்காக வந்தவர்கள், பின்னர் பின்னலாடை தொழில், ஹோட்டல், டீ க்கடைகள், மால்கள், துணிக்கடைகள் என அனைத்து பகுதிகளிலும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க, விவசாயத்திலும் வடமாநிலத்தவர் வருகை தொடங்கிவிட்டது.
  • திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக, துறையூர் பகுதியில் உள்ள பெரிய ஏரி சின்ன ஏரி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின.
  • மகிழ்ச்சியில் திளைத்த விவசாயிகள் உடனடியாக, நெல்நடவில் ஈடுபட சுறுசுறுப்பு காட்டினார்கள். ஆனால் நெல்நடவிற்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாற துவங்கினார்கள்.
  • வேறு வழியில்லாமல், நெல்நடவுப் பணிக்காக வடமாநிலத்தவர்களை இறக்கியுள்ளனர் விவசாயிகள். கான்ராக்ட் முறையில் அழைத்து வரப்படும் வடமாநிலத்தவர், ஏக்கர் கணக்கில் நெல்நடவுப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில இடங்களில் கரும்பு நடவு மற்றும் கரும்பு வெட்டுதலுக்கும் வடமாநிலத்தவர்களே பயன்படுத்தப்படுகின்றனர்.
  • ஒரு ஏக்கர் நெல்நடவு செய்ய வேண்டுமென்றால் 30 நபர்கள் தேவை. தமிழர்களென்றால், ஒரு ஏக்கருக்கு 10,500 ரூபாய் கூலி தர வேண்டியுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டால், 5500 ரூபாய் மட்டுமே கூலியாக தருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்