45 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் அரக்கன்.. தமிழகத்திற்கு 7 ஏழு நாட்கள் கெடு.. எச்சரித்த வானிலை மையம்
தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story