உயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த அதிகாரிகள் - காடுகளை தாண்டி சென்ற கடமை
பந்தலூர் அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கிளன்ராக் வனப்பகுதி அமைந்துள்ளது. பந்தலூர் பஜாரில் இருந்து,10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதியில், பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாத நிலையில், மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வனத்துறையினர் பாதுகாப்போடு, கரடு, முரடான பாதையை கடந்து அங்கு சென்ற சுகாதாரத்துறையினர், 8 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர். இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது....
Next Story