குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. கிட்னியே பெயிலர் ஆகலாம்
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. கிட்னியே பெயிலர் ஆகலாம் - தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
வெப்ப அலையிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது
அதில், வெயில் காலங்களில் வெண்மை நிற அல்லது வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும், ஜீன்ஸ் , லெக்கின்ஸ் உள்ளிட்ட உடலை இறுக்கும் ஆடைகளையும், கருப்பு நிற ஆடைகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரு நாளைக்கு 2 1/2 லிட்டர் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வெயிலில் நின்று தான் ஆக வேண்டுமென்ற கட்டாயம் உள்ள உடலுழைப்பு தொழிலாளர்கள் 5 லிட்டரை விட எவ்வளவு முடியுமோ கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
பொட்டாசியம் நிறைந்த பானமாகிய இளநீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
குழந்தைகள், வயதானோர், கப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும் என்றும், தவிர்க்க இயலாமல் வெயிலில் செல்ல வேண்டி இருந்தால் வெளிர் நிற குடைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
தொடர்ந்து 2 நாட்கள் மிக அதிகமான வெயிலில் இருக்க நேர்ந்தால் Heat stroke எனப்படும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது