'மிளகு' முதல் 'மையங்கள்' வரை பெரும் கவனம் பெற்ற வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்

x

வேளாண்மை பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளை பார்க்கலாம்,பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அறிவித்தார். கொல்லிமலை மிளகு, சத்தியமங்கலம் செவ்வாழை உட்பட 8 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் எனவும்,பட்டதாரி இளைஞர்கள் 100 பேர் வேளாண் தொழில் தொடங்க அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்கள் வழங்கப்படும் எனவும், பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்ய 2 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, சத்துக்கள் செறிவூட்டப்பட்ட நெல் ரகங்கள் உருவாக்கப்படும் எனவும்,டெல்டாவில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி", "டி" பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்படும் எனவும்,செங்காந்தள் உள்ளிட்ட மூலிகைப் பயிர் சாகுபடி ஊக்குவிக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்கள் உற்பத்திக்கு 27 கோடியே 48 லட்சம் ரூபாயும், வாழை உற்பத்திக்கு 12 கோடியே 73 லட்சம் ரூபாயும்,தூத்துக்குடி, வேலூர், தருமபுரி, கரூரில் பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க 30 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.32 கோடியே 90 லட்சம் ரூபாய் மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்