ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுடன் கட்சியினர் வாக்குவாதம்.. தாம்பரத்தை தொற்றிய பரபரப்பு

x

தாம்பரம் பேருந்து நிலையத்தில் தொடர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேற்கொண்ட ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது

சென்னை தாம்பரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி,உதவி ஆணையர் நெல்சன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். அப்போது நெடுஞ்சாலை துறை அதிகாரி வசந்த்திடம் தாம்பரத்திலிருந்து முடிச்சூர் செல்லும் சாலையில் அதிகப்படியான பள்ளங்கள் காணப்படுவதால் அதை சீர் செய்ய வேண்டும் என திமுகவினர் கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு சிஎன்ஜி கேஸ் பைப்லைன் பதிக்கும் பணி நடைபெறுவதால் பள்ளங்கள் ஏற்படும் என பதில் கூறியதையடுத்து, அதிகாரியிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் இருதரப்பையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையம் சிறிது நேரம் பரபரப்படைந்தது.


Next Story

மேலும் செய்திகள்