தாம்பரம் ஸ்டேஷன்..மன ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பயணிகள்
தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று, நாளை முதல் ரயில் போக்குவரத்து மீண்டும் சீராகும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.3வது முனையமாக மாற்றப்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மறுசீரமைக்கப்பட்டு புதிய தண்டவாளங்கள் எட்டு கிலோமீட்டர் தூரம் அமைக்கும் பணி முற்றிலும் நிறைவு பெற்றுள்ளது. மேலும், கிராஸிங் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள், 7 மற்றும் 8வது நடைமேடைகளை அகலப்படுத்தும் பணிகள் நிறைவுபெற்றன. 9 மற்றும் 10 ஆகிய நடைமேடைகளை அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவுபெற்று இன்றைக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் என்றும், நாளை முதல் ரயில் போக்குவரத்து மீண்டும் சீராகும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் நலன் கருதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.