சென்னையை தொடர்ந்து தாம்பரத்திற்கும் புதிய கமிஷனர்.. உளவுத்துறை சொன்ன முதல் தகவல்

x

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த அமல்ராஜ், சென்னை மதுவிலக்கு அமலாக்க கூடுதல் பிரிவுக்கு டி.ஜி.பி ஆக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி ஆக பணியாற்றி வந்த அபின் தினேஷ் மோதக் ... தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாகவும், டாஸ்மாக் கடை அருகே, சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன. தொடர்ந்து, போதை பொருள் விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக கொலைகளும் அரங்கேற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில், காவலர்கள் சிலர் சமூக விரோத கும்பலுடன் மறைமுகமாக தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. குறிப்பாக மணிமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலை நகர் காவல்நிலையங்களில் பணி புரியும் காவலர்கள் சிலர், குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் தொடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு தகவல் கொடுத்து தப்பிக்க வைத்து விடுவதாக உளவுத்துறையினர் துப்பு கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு, கடும் சவால்களுக்கு மத்தியில் தாம்பரம் காவல் ஆணையராக பதவியேற்றிருக்கும் அபின் தினேஷ் மோதக், போதைப் புழக்கம், மற்றும் ரவுடிக் கும்பலுகு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்