டி20 உலகக்கோப்பை-வரலாற்று சாதனை படைத்த ஆப்கன் | afghanistan | australia

x

டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறுச் சாதனை படைத்துள்ளது... கிங்ஸ்டவுனில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் குரூப் ஒன் பிரிவில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச தீர்மானித்த நிலையில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ், இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்புதின் நயீப் 4 விக்கெட்டுகளையும், நவீன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. மேலும் முன்னதாக டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு ஆப்கானிஸ்தான் பழி தீர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்