குடும்பத்தில் என்ன நடந்தது? தீயாய் சுற்றிய பல தகவல்கள் - சூர்யா, ஜோதிகா ரகசியம் உடைந்தது

x

குடும்பத்தில் என்ன நடந்தது? தீயாய் சுற்றிய பல தகவல்கள் - சூர்யா, ஜோதிகா ரகசியம் உடைந்தது

ஆன் ஸ்கிரீன் மட்டுமில்ல.. ஆஃப் ஸ்கிரீனிலும் அனைவரின் மனம் கவர்ந்த ஜோடிதான் சூர்யாவும், ஜோதிகாவும்..

இருவரும் ஒன்றாக வெளியில் எங்காவது தென்பட்டால் போதும், ஒரு வாரத்திற்கு அது சம்பந்தமான வீடியோதான் இணையத்தில் டிரெண்ட் ஆகும்..

இதனிடையே கங்குவா திரைப்பட ப்ரோமஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்ட சூர்யா.. நான் ஏன் ஜோதிகாவுடன், மும்பையில் செட்டிலானேன் என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்...

18 வயதிலே தான் பிறந்து வாழ்ந்த மும்பையை விட்டு சென்னை வந்த ஜோதிகா, பின் தன்னை திருமணம் செய்து சுமார் 27 வருடங்களாக சென்னையிலே தங்கியதாக தெரிவித்திருக்கிறார்..

இப்போது திரும்பி பார்த்தால், வெறும் 18 வருடங்கள்தான் அவர் அவருடைய ஊரிலும், பெற்றோருடனும் இருந்திருக்கிறார்..

தனக்காக, தன் ஊரை, பெற்றோரை, சொந்த பந்தம் மற்றும் நண்பர்களை பிரிந்து, சென்னையில் தங்கிய ஜோதிகாவுக்கும், தன் பெற்றோருடன் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும் நிலையில், அதை நான் ஏன் அபகரிக்க வேண்டும் என்றிருக்கிறார்..

எப்பவுமே, நான் நான்னு ஏன் யோசிக்கணும், 27 வருடங்கள் எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் சென்னையில் இருந்த ஜோவுக்காக, இப்போது மும்பையில் குடியேறி இருக்கிறேன் என்றிருக்கிறார் சூர்யா..

நாம் ஏன் ஒரு பெண்ணிடம் இருந்து, அவரின் பெற்றோருடனான நேரத்தை அபகரிக்க வேண்டும் ?, ஒரு பெண்ணின் வாழ்வியலை நாம் ஏன் எடுத்து கொள்ள வேண்டும் ?, இந்த அணுகுமுறையை நாம் எப்போது மாற்றிக் கொள்ள போகிறோம்? என்ற கேள்வியே தன்னை மும்பை நோக்கி நகர வைத்ததாக சூர்யா தெரிவித்திருக்கிறார்...

புரிதலும், அன்பும் அதிகம் கொண்ட ஜோடி என அனைவராலும் கவரப்பட்ட இவர்கள், இப்போது அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்...


Next Story

மேலும் செய்திகள்