பண மசோதா விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி | Supreme Court | Thanthitv

x

அரசியல்சாசனப்படி மத்திய அரசு கொண்டுவரும் பண மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் தந்தால் போதுமானது. மாநிலங்களவைக்கு மசோதா செல்லாது. வரி விதிப்பது, குறைப்பது, கூட்டுவது, ரத்துசெய்வது உள்ளிட்ட ஒழுங்காற்றுச் செயல்கள் நிதி நிர்வாகம் போன்ற 7 அம்சங்களுக்கு பண மசோதா கொண்டுவர அரசுக்கு சட்டம் அதிகாரமளிக்கிறது. ஆனால் ஆதார் சட்டம், அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் பத்திர திட்டம் போன்றவை பண மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இப்படி பண மசோதாக்களை சட்டமாக்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்விடம் கேட்டுக்கொண்டார். அப்போது இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை விசாரிக்க அரசியல்சாசன அமர்வு ஏற்படுத்தப்படும் என தலைமை நீதிபதி என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்