நாடே உற்று நோக்கும் ஓட்டு மெஷின் வழக்கு - இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

x

மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேடுகளையும் சரிபார்க்க கோரும் பொதுநல மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

கேரள மாநிலம் காசர்கோட்டில் வைக்கப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில், பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டி, விவிபேடுகளையும் சரிபார்க்க‌க்கோரி பொதுநலமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 18 -ஆம் விசாரித்தது. அப்போது, குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்த‌து. ஆனால், வாக்காளர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களயும் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இன்று இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று வழங்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்