ஸ்டெர்லைட் திறப்பு? பாயிண்டுகளை அடுக்கிய வேதாந்தா-வழக்கில் திருப்பம் - சுப்ரீம் கோர்ட் சொன்ன யோசனை
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை,
1997ல் தூத்துகுடியில் தொடங்கப்பட்டது.
ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் திறன்
கொண்ட ஸ்டெர்லைட் இந்தியாவின் மிகப் பெரிய தாமிர
உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்தது.
விதிமுறைகளுக்கு முரணாக, காற்று மற்றும் நிலத்தடி நீர்
மாசுகளை ஏற்படுத்துவதாக கூறி, இதற்கு எதிராக
நடந்த தொடர் போராட்டங்கள், வழக்குகளின் விளைவாக
2018ல் தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்டது.
ஸ்டெர்லைட் தாமிர உருக்கலையை மீண்டும் திறக்க
அனுமதி அளிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா
குழுமம் வழக்கு தொடர்ந்தது.
தாமிர ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது இறக்குமதி
செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேந்தாந்தா
வழக்கறிஞர் வாதாடினார்.
இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு,
இதைப் பற்றி ஆய்வு செய்ய 6 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர்கள் குழுவை அமைக்க பரிந்துரை செய்துள்ளது.
ஐ.ஐ.டி மற்றும் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் பிரதிநிதிகளுடன், உச்ச நீதிமன்றம் நியமனம் செய்யும் மூன்று நிபுணர்கள் இந்த குழுவில் இடம் பெறலாம் என்று கூறியுள்ளது.
இந்தியாவின் தாமிர உற்பத்தியில் 46 சதவீத பங்கு கொண்டிருந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்பட்ட பின், கடந்த ஐந்தாண்டுகளாக, உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய தாமிரம் இறக்குமதி செய்யப்படுகிறது.
தாமிர இறக்குமதி அளவு, 2021-22ல் 21,985 கோடி ரூபாயாக இருந்து, 2022-23ல் 27,131 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் அமைக்க உள்ள நிபுணர் குழு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளித்தால், இந்தியா மீண்டும் தாமிர ஏற்றுமதியாளராக உருவெடுக்கும் என்று துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.