உச்ச நீதிமன்றம் வரை சென்ற சிவகங்கை வழக்கு.. MLA மனைவிக்கு இடியை இறக்கிய உத்தரவு

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி MLA-வின் மனைவி பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றது செல்லாது என மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், தற்போதைய எம்.எல்.ஏ.வான மாங்குடியின் மனைவி தேவி வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி ஆட்சேபனை தெரிவித்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டு பேருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலில் வெற்றி சான்றிதழை பெற்ற தேவி கடந்த ஆண்டு பதவி ஏற்று கொண்டார். இதற்கிடையே, கடந்த நான்கு வருடங்களாக சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி சொர்ணம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். அதில், பிரியதர்ஷினி வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம் தேவி வெற்றி செல்லாது என நீதிபதி தெரிவித்துள்ளது, அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்