கைக்கு வந்த `சாவி'... வென்றார் கவுண்டமணி... ஹைகோர்ட் டூ சுப்ரீம் கோர்ட் - 20 ஆண்டுகால போராட்டம்

x

பெரும் கனவுடன் வாங்கிய நிலத்தை இழந்து தவித்த நடிகர் கவுண்டமணிக்கு, 20 வருடங்களுக்கு பிறகு சட்டத்தின் வாயிலாக நீதி கிடைத்திருக்கிறது. பார்க்கலாம் விரிவாக...

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின், 20 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது...

1996 இல், சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள 22,700 சதுர அடி நிலத்தை பிரம்மாண்ட வணிக வளாகம் கட்டும் நோக்கில் கவுண்டமணி வாங்கியிருந்தார்..

தொடர்ந்து அந்த வருடமே, அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்துடன், 3 வருடங்களில் வணிக வளாக கட்டுவதற்காக சுமார் 3 கோடியே 58 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்ட கவுண்டமணி, முதற்கட்டமாக ஒரு கோடியே 4 லட்ச ரூபாயும் செலுத்தியிருக்கிறார்..

இந்நிலையில், 2003 வரை எந்தவொரு கட்டுமான பணியும் மேற்கொள்ளாமல், கட்டுமான நிறுவனம் அலைக்கழித்து வருவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்கு தொடர்ந்தது சலசலப்பை ஏற்படுத்தியது..

இதற்கு, பணத்தை முழுமையாக செலுத்தாததால், கட்டுமான பணியை நிறுத்தி வைத்திருப்பதாக நிறுவனம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து சம்பந்தப்பட்ட நிலத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்...

இதன்படி சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், 46 லட்ச ரூபாய்க்கு மட்டுமே பணிகள் நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டது..

இதற்கு தீர்ப்பளித்த நீதிபதி, கட்டுமானப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு பணம் தராவிட்டால்தான் அதைக் கேட்க முடியும் எனவும், தற்போது வரை முடிவடைந்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே நடிகர் கவுண்டமணி கொடுத்திருப்பதாகவும் கூறிய நிலையில், கவுண்டமணியிடமிருந்து பெற்ற நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க உத்தரவிட்டார்..

2019-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த தீர்ப்பில்... 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார் நீதிபதி..

இந்த தீர்ப்பை எதிர்த்து.. கடந்த 2021இல் தனியார் கட்டுமான நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, நிலத்தை கவுண்டமணியிடம் ஒப்படைக்குமாறு கடந்த மார்ச் 14இல் தீர்ப்பளித்தார்...

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி சுமார் 20 ஆண்டுகள் சட்டப்போராட்டத்திற்கு பிறகு நடிகர் கவுண்டமணியிடம் அவரின் நிலம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்