சிறுமி கூட்டு பலாத்காரம்.. சுப்ரீம் கோர்ட் வரை சென்று அசிங்கப்பட்ட பரமக்குடி கவுன்சிலர்

x

போக்சோ வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பரமக்குடி கவுன்சிலருக்கு வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் சிகாமணி உட்பட 5 பேர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, சிகாமணிக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து சிகாமணி தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ததுடன், 3 வாரங்களுக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைய சிகாமணிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான கவுன்சிலர் சிகாமணியை, அக்டோபர் 25-ம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கில் குற்றம்சாட்டபட்ட 5 பேரும் வரும் 25-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்