ADR-ன் பொதுநல மனு.. "முடியாது".. உச்சநீதிமன்றம் மறுப்பு
தேர்தலில் பதிவான வாக்கு சதவீத விவரங்களை உடனடியாக
வெளியிட கோரும் பொதுநல மனு மீது எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஏடிஆர் அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவில், முதல்
கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவுற்று 11 நாள்கள் கழித்தும்,
2ஆவது கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவுற்று 4 நாள்கள்
கழித்தும் வாக்கு சதவீத விவரங்களை தேர்தல் ஆணையம்
வெளியிட்டுள்ளதாக கூறியிருந்தது. வாக்குப் பதிவு நாளக்கும்,
தற்போது வெளியிட்டுள்ள தரவுக்கும் 5 சதவீதம் வேறுபாடு
உள்ளதாக கூறியுள்ளது. ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்த
நடந்து முடிந்த உடனே, பதிவான வாக்கு விவரத்தை தெரிவிக்கும் 17சி படிவத்தை பதிவேற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியிருந்தது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மணீந்தர் சிங் 5 சதவீத வேறுபாடு உள்ளதாக கூறப்படுவது பொய் என்றார். மனுதாரர் தரப்பு வாதத்தை நிராகரித்த
உச்சநீதிமன்றம், தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பித்தால்
நிலுவையில் உள்ள ரிட் மனு மீது இறுதி உத்தரவு பிறப்பித்தாகி
விடும் என்பதால் இந்த மனு மீது எந்தவொரு உத்தரவையும்
பிறப்பிக்க முடியாது என்று கூறி, விசாரணையை ஜூலைக்கு
தள்ளி வைத்தது.