செந்தில் பாலாஜி கேசில் ட்விஸ்ட் வைத்த பென் டிரைவ்... EDக்கு பறந்த கேள்வி... உள்ளே இருந்தது என்ன..?

x

இது தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. பண மோசடி புகாருக்கு ஆதாரமாக கூறப்படும் கோப்பு, கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இல்லை என்பது செந்தில் பாலாஜியின் வாதமாகவுள்ள

நிலையில், இந்த கோப்பு அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது என நீதிபதிகள் கேட்டனர். அமலாக்கத் துறையின் வழக்கறிஞர் சோயிப் ஹுசைன், புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் பென் டிரைவில் இருந்த கோப்பை விளக்கினார். செந்தில் பாலாஜியின் வருவாய் ஆதாரமாக தெரிவிக்கப்பட்ட விவசாயம், எம்எல்ஏ சம்பளம்

ஏற்கும்படி இல்லையென்றும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் பெரும் தொகைகள் அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார். செந்தில் பாலாஜியின் வாதங்களை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துள்ளதையும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்