"இந்தம்மாவ டிஸ்மிஸ் பண்ணாட்டா ஸ்கூலுக்கு அனுப்பவே மாட்டோம்.. கண்ணையே குடுக்குறேனு சொன்னாங்க''

x

"இந்தம்மாவ டிஸ்மிஸ் பண்ணாட்டா ஸ்கூலுக்கு அனுப்பவே மாட்டோம்..கண்ணையே குடுக்குறேனு சொன்னாங்க'' - HM-க்கு எதிராக கொதித்த பெற்றோர்

சூலூர் அருகே அரசு பள்ளியில் மர்ம பொருள் வெடித்த விவகாரத்தில் தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என பெற்றோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

சூலூர் பொன்னாங்காணி அரசு உயர்நிலைப்பள்ளியில் குப்பைகளை எரித்தபோது மர்ம பொருள் வெடித்து காயம் அடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மாணவனின் சிகிச்சை செலவை ஏற்பதாக கூறிய தலைமை ஆசிரியர் இப்போது அது முடியாது என சொல்லியதாக பெற்றோர் போராட்டம் நடத்தினர். பேச்சை மாற்றும் தலைமை ஆசிரியர் நாளை எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு வரவில்லை எனவும் சொல்வார் அவரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் மாவட்ட கல்வி இயக்குநர் பேசியபோது, தலைமை ஆசிரியை மாற்ற முயற்சியை மேற்கொள்வோம் என்றார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்